தவறு
செய்யவதே
தலையாய
கடமையாய்
கருவிலிருந்து
நினைவில்
நிறுத்தி
ஜனிக்கும்
உயிர் ?
இல்லை…
இல்லை…
சூழ்நிலை
சுற்றியிருந்து
சுகித்திருக்க
முடியாததால்
அடுத்தவருக்கு
அநியாயம்…
விரலை
தன் பக்கம்
நீட்டிட
அச்சம் கொண்டு
சாடிடுவார்
சமூகத்தை…
தன்னுடைய
நிலமைக்கும்
சூழும்
நிலையை
காரணியாக்கும்
முதுகெலும்பில்லா
மூடர்கள்
மொத்தமாய்
முடங்கிட்டால் ??
எதிர்பார்ப்புடன்
மனிதம்…
அருமை நண்பரே!
ReplyDeleteநன்றி ஆகாஷ்
ReplyDelete