சண்டை, சச்சரவு சாத்தியம்
நம்பிக்கையே நாகரீகம்
வாய்மையே வெல்லும்
காயங்கள் களவாடப்படும்
கண்ணீர் கரை காணும்
புன்னகை புண் ஆற்றும்
நிஜமான நகைச்சுவை நஞ்சை அகற்றும்
மாயமான, மதிகெட்ட வாதங்கள் முடிவின்றி தொடரும்
சகிப்புத்தன்மை சாதரணமாகும்
தொடர்பு தொடரும்
அந்தரங்கம் ஆராயப்படும்
பொறாமை போற்றப்படாது
இவையாவும் இறுதிவரை இயங்கினால்
காதல் மெய்ப்படும்!!
நீங்கள் சொல்வதும் சரிதான்
ReplyDeleteகாதல் வெல்வதற்குள் அல்லதுதோற்பதற்குள்
இத்தனையும் நடந்து முடிந்து விடுகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
புதிய படைப்பாளி நான்....தங்களின் பின்னூட்டம் நம்பிக்கை தருகிறது...நன்றி!
ReplyDelete