தவறுகள் தடையின்றி மடிந்து
இடையூறுகள் மாசற இடிந்து
நிச்சயமான நிகழ்வுகள்
நிசப்தமாய் அரங்கேறும்
பொற்காலம் பரணியிலே
தற்காலத்தில் தரணியிலே
தடையின்றி பெறுவது வரம்….
வருவது வரட்டும் என்றிருப்பின்
வராது வரம்….
வஞ்சனையில் கஞ்சனாய்
நெஞ்சத்தில் நஞ்சகற்றி
குறை கூறும் நாவினிலே
நிறையை போற்று நரம்போடு…
உற்றாரிடம் குற்றம் சொல்ல
சுற்றார் சாட்சியோ ?
தவற்றினை தவமாய் சத்தியமாய் செய்யவில்லை….
சேற்றினை வாறி இறைக்காமல்
தாமரையாய் மலர்வதற்கு
தயங்காமல் தோள் கொடு….
மனித நேயத்தை போற்றினால்
வரும் வரம்!!
அருமையான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷங்கர்..!
நன்றி @ Rangarajan....
ReplyDeleteகுறை கூறுவதை விடுத்து நிறை கண்டு... வாழ்ந்தால் நிச்சயம் நிம்மதி கிடைக்கும். நல்ல கவிதை. நன்றி.
ReplyDeleteபுரிதலுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி @ Ananthi
ReplyDeleteவஞ்சனையில் கஞ்சனாக., நல்லதொரு சிந்தனை., நேர்மறை எண்ணங்களை கொண்ட கவிதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள் ஷங்கர் :)
ReplyDelete@siva - பின்னூட்டத்திற்கு நன்றி...
ReplyDeleteஅன்பின் ஷங்கர்
ReplyDeleteஅருமை அருமை கவிதை அருமை. எண்ணக்கள் சிறந்தவை. நிச்சயித்த நிகழ்வுகள் நிச்சயமாய் நிசப்தமாய் நிறைவேறும். தவறு தவமாய்ச் செய்யப் படுவதில்லை. சொற்கள் தேர்ந்தெடுத்துத் தொடுக்கப்பட்ட கவிதை நன்று. நல்வாழ்த்துகள் ஷங்க்ர் - நட்புடன் சீனா
நல்ல கவிதை.
ReplyDelete//உற்றாரிடம் குற்றம் சொல்ல சுற்றார் சாட்சியோ ?// விளக்கவும்.
@ Cheena & சேலம் தேவா - பின்னூட்டத்திற்கு நன்றி....
ReplyDelete@ சேலம் தேவா - குற்றம் சொல்லும் போது, சாட்சிகளை சேர்த்து கொள்வோம். உற்றாரைப் பற்றி குற்றம் சொல்வதானாலும் சரி ; உற்றாரிடம் குற்றம் சொல்வதனாலும் சரி.... நாம் சாட்சிகளை உண்டாக்கிக் கொண்டு பின் குற்றம் சொல்வோம். அந்த சாட்சிகள் சுற்றத்தினரிடம் உண்டாக்க முயற்சி செய்வோம். உற்றாரும் ஒரு நாள் சுற்றார் ஆவார்....அதை மறந்து விடுகிறோம்.
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
@ Rathnavel Natarajan - நன்றி...
ReplyDelete