பழங்கதைகள் பழக்கங்களாகவும்
வழக்கங்கள் வலுக்கட்டாயமாகவும்
விதி என்ற பெயரில்
விதி ஆனதோ வாழ்வில்?
மதி கொண்டு
மாற்றம் செய்ய எத்தனித்தால்
மாற்றானாம்….
பகுத்தறிவு பயன்படுத்தி
பக்குவப்பட பிரச்சாரித்தால்
பக்குவப்படாதவனாம்….
மாந்தரின் மயக்கத்தினால்
மாற்றத்திற்கு மாற்றுகருத்து
மாறாமல் மாயையாய்…
தகுதியற்றவனாய் தரம்தாழ்த்தும்
காழ்ப்புணர்ச்சி காலம்தோறும்...
தயக்கமின்றி தெளிந்து
தடைகள் தகர்த்தி
மாறித்தான் மாற்றுவோமே
மாற்றங்களை மதித்து!!
EXCELLENT!!!!!
ReplyDelete//மாறித்தான் மாற்றுவோமே
ReplyDeleteமாற்றங்களை மதித்து!!//
இறுதியில் அழகா முடிச்சிடீங்க...அருமை.
Very nice... Keep it coming. :)
ReplyDeleteஅன்பின் ஷங்கர்
ReplyDeleteமாற்றம் ஒன்று தான் மாறாதது. அதனைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். மாற்றங்களை மதித்து மாறுவோம். நல்ல சிந்தனை -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Nice!
ReplyDeleteமாறிடுவோம்ண்ணே... :)
ReplyDeleteஅருமை பகிர்விற்கு மிக்க நன்றி!ஷங்கர்
ReplyDelete