விடியலில்
வானம் பார்த்து
வியந்து நின்றேன்
கதிரவன் உத்வேகத்துடன்!!
சிற்சில நாட்களில்
முறிக்காத
சோம்பலுடன்…
மறைக்காமல்
சொல்லேன்
முடியவில்லை
தானே
முந்நூற்றி
நாட்கள்
முகம் காட்ட
?
மடக்கி விட்ட மகிழ்ச்சியில் நான்...
வீரியத்துடன்
விண்ணிலிருக்கிறேன்
வீணாக்காமல்
ஒவ்வொரு நொடியும்
நித்தம் வரமுடியாத
மேகம்
கண்ணீருடன்
சோகமாய்…
காண மனம் பொறுக்காமல்
பின்னால் மறைந்து
ஆனந்த கண்ணீராய்
அவ்வப்போது
மாற்றுவேன் – மழையாய்!
பதில் கேட்டு
வெட்கி தலை
குனிந்தேன் – மனிதனாய்…
நல்ல கவிதை. தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteசோம்பலை விரட்டும் கதிரவன்.
ReplyDeleteTEMPLATE COMMENT PODAMATEN... INNUM NERAYA PADINGANEY APPOTHAN INNUM SUPERAA ELUTHA MUDIYUM... VAZTHUKKAL.
ReplyDeleteகவிதை நன்று ஷங்கர் - கதிரவனின் வெப்பமும் மழையும் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
பின்னூட்டம் கொடுத்த அன்பு தோழமைகளுக்கு நன்றி...@ananthi,சேலம் தேவா, ஜீவன்பென்னி, cheena ஐயா மற்றும் Rathnavel Natarajan ஐயா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி...
ReplyDelete