அறிந்தவர்களிடத்தே அறிமுகம்
அறவே தேவையில்லை...
அறியாதவர்கள் அறிந்துகொள்ள
அருகில் இருக்கும்
அறிந்தவர்கள் அறிமுகம்
அருகில் நாம்....
நாமும் இருப்பதால்
அறிமுகத்தில் நன்முகம்
நமட்டு சிரிப்புடன்
நாம்!
யாரோ யாரிடத்திலோ
யாரைப் பற்றியோ
அறிவிக்க
நன்முகம் கொஞ்சமும்
நயவஞ்சகம் நிறையவும்...
பிரதிபலன் பிரதிநாளும்
பின்மனதில் பிரபலமாய்!
எதுவுமே இல்லாமல்
என்னை அறிவித்த
என்னையே பெற்றெடுத்த
அன்னையே....
அன்பு நீ!!
அகமும் நீ!!
நன்றி தோழா...
ReplyDelete//அன்பு நீ!!
ReplyDeleteஅகமும் நீ!!//
அம்மாவும், தன் அம்மாவை இப்படி அறிவித்த மகனும் பிடித்திருக்கிறது!
அருமை!
யாரை, எதை பற்றியோ என நினைக்க வைத்து பாசத்தில் கொண்டுவந்து முடித்து விட்டீர்கள்.
அழகு !
புரிதலுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தோழி....
ReplyDeleteஆத்மார்த்தமான கவிதை.. நன்று..
ReplyDeleteநன்றி Niyaz
ReplyDeleteSuper Shankar! Romba Arumai!
ReplyDeleteThanks Vidya..
ReplyDelete