மெளனமான நடையிலும்
மனதில் தடையின்றி
சிந்தனை சிதறல்...
நடந்த தூரம்
நாலடி இருந்தும்
எண்ண ஓட்டம் ??
நினைவுகள் பின்னோக்கி
நியாயமாய் நகர்ந்தாலும்
நிச்சயமான நிதர்சனம்
நிகழ்காலம்!!
வருங்கால வாழ்வினை
வென்றிட துடித்தாலும்
வெற்றியை வழங்குவது
இக்காலம்!!
கேலிகள் மனிதத்திற்கு
கேள்விகள் கேட்டாலும்
கேடு வரும் காலத்தை
முடிவெடுப்பது
மதி....இன்றைய மதி!!
நாளைய கவலையை
கவலையில் ஆழ்த்த
நிசப்தம் தவிர்த்து
நிகழ்த்திக் காட்டுவோமே...
நிகழ்காலத்தில்!!
'பாட்டாலே புத்தி சொன்னான்' ராஜா சார் பாட்டு நினைவுக்கு வருது :)
ReplyDeleteஅருமையான கருத்துக்களை அழகான கவிதையாகிய உங்களுக்கு பாராட்டுகள்.
நிகழ்காலத்தில் அமைதியாய் வாழ்வதை மறந்து கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்தையும், இறந்து போன இறந்தகாலத்தையும் எண்ணி கவலைப்பட்டு ஆகபோவது ஒன்றுமில்லை!
நல்ல கவிதை.
//
ReplyDeleteவருங்கால வாழ்வினை
வென்றிட துடித்தாலும்
வெற்றியை வழங்குவது
இக்காலம்!!
//
நல்ல வரிகள்! அருமையான கவிதை!
பின்னூட்டத்திற்கு நன்றி..@ வரலாற்று சுவடுகள் / Kousalya...
ReplyDelete/// கேலிகள் மனிதத்திற்கு
ReplyDeleteகேள்விகள் கேட்டாலும்
கேடு வரும் காலத்தை
முடிவெடுப்பது
மதி....இன்றைய மதி!! ///
மிகவும் பிடித்த உண்மை வரிகள்
நன்றி... வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்...
Delete