கதை கேட்கும்
குழந்தையிடம்
கதைக்க நேரமின்றி
கதையடிக்கிறோம்…
சொல்லாமல் இருக்க….
கதை சொல்லாதிருக்க….
சேமித்ததாய் நினைத்த
நேரமும் காலமும்
தொலைவில் காட்சிதரும்
தொல்லைக் காட்சியில்
விரயம்!
விரைவில் நிலை மாறும்
நாளை கண்டிப்பாக….
விசும்பலோடு உறங்கிய
பிஞ்சு மனதில்
விடியலை நோக்கிய
நம்பிக்கை!
//தொலைவில் காட்சிதரும்
ReplyDeleteதொல்லைக் காட்சியில்
விரயம்!//
உண்மை
நன்றாக முடித்துள்ளீர்கள் சார்...
ReplyDelete/// கதையடிக்கிறோம்…
சொல்லாமல் இருக்க….
கதை சொல்லாதிருக்க….///
அருமை...
விரைவில் நிலை மாறட்டும்...
ReplyDeleteகதை கேட்கும்
ReplyDeleteகுழந்தையிடம்
கதைக்க நேரமின்றி
கதையடிக்கிறோம்
யதார்த்தம் சொல்லும் வரிகள்
மிகச் சரி
ReplyDeleteநம்மிடம் குழந்தைகளிடம் சொல்லும்படியான
கதைகள் இல்லாதிருப்பதும் அதற்கான
நேரமும் பொறுமையும் இல்லாதிருப்பதே
ஒரு வெட்கக்கேடான் விஷயம்தான்
அதை நாசூக்காகச் சொல்லிப்போகும்
கவிதை மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரமணி ஐயா கருத்தை வழிமொழிகிறேன், இப்போதெல்லாம் யாருக்கு கதை தெரிகிறது குழந்தைக்கு சொல்ல!
ReplyDelete