மனதில் என்றும்
மங்கையின் நினைவுகள்…
உறக்கத்திலும் உறங்கவில்லை!
விழியில்… என் விழியில்
அவள் விழும் வரை
இமை திறக்காதிருந்தேன்….
அவளின் மதுரத்தமிழ்
செவியில் ஒலிக்கும்வரை
காது கேளாதிருந்தேன்…
பிறநாற்றம் நாடாமல்
மங்கையின் சுவாசம் தேடி
மூச்சை அடக்கியிருந்தேன்…
பேதையின் பெயரினைமட்டும்
உச்சரிக்கும் இச்சையுடன்
தெரியும்வரை ஊமையாயிருந்தேன்…
உடலை என்செய்வேன் ?
அந்தரத்தில் இருந்தாலும்
காற்றை தீண்டுவேனே….
சட்டென்று முடிவெடுத்தேன்…
காதலை சொல்லிவிட்டால் ?
என்னுள் இருக்கும் உணர்வு
அவளிடமும் இருக்குமே…
ஐம்புலனையும் செயல்படுத்தாது
நான் இருந்தேன்… சுயநலத்துடன்…
நங்கையையும் நோகடித்தேன்…
ஞானம் பெற்று
காதலை வெளிப்படுத்தினேன்!!
சொல்லப்படும் வரை - காதல்
செல்லாத காதல் தான்….
சொல்லப்படும் வரை - காதல்
ReplyDeleteசெல்லாத காதல் தான்….//
நிச்சயமாக நம்மை விட்டு
காதலியின் செவிக்குச் செல்லாத காதல்
செல்லாத காதல்தான்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
//
ReplyDeleteமனதில் என்றும்
மங்கையின் நினைவுகள்…
உறக்கத்திலும் உறங்கவில்லை!
//
நல்ல வரிகள், துவக்கம் அருமை!
அருமையாக முடித்துள்ளீர்கள் சார்...
ReplyDeleteதங்களின் நேரத்திற்கு நன்றி (படித்ததற்கும் பின்னூட்டத்திற்கும்)... @தனபாலன், வரலாற்று சுவடுகள், Ramani
ReplyDelete