உன்
உயிர் நான்
என்னை
கேட்காமலே
உனதாக்கிவிடு
என்னை!
என்ன
தயக்கம் ?
கண்களால்
கேட்டாய்…
என்னை
நானே
எனதாக்குவது எப்படி ?
நீ
தானே நான்….
எண்ண
ஒட்டம்…
புருவம்
உயர்த்தி
புரிதலோடு
புன்சிரித்தாய்…
அர்த்தம்
அறிந்தேன்
அதை
நீயும் உணர்ந்தாய்…
அடுத்தது
என்ன?
ஒன்றும்
புரியாமல்
இருவரும்
இருந்தோம்…
மனதை
படித்து
விழி
பேசும்
உன்னதமான
காதல்
மொழியில்
உருக்கமாய்
லயித்து!
நில்லாயிருக்கு..நண்பா
ReplyDeleteநன்றி @ Semmalai Akash
ReplyDelete