விழியோடு
விழி
விந்தையாய்
கலந்திட்டால்
செவியும்
சாய்வதில்லை
வாயும்
மொழிவதில்லை
பல
அர்த்தங்களின்
பரவலான
பரிமாற்றம்
சுவாசத்தின்
சப்தத்தோடு!!
இருவரின்
சுவாசம்
இரண்டற
கலந்து
இன்பத்தின்
உச்சம்
விழியின்
வழியாய்...!
சகலமும்
மறந்திருந்தும்
உணர்வென்றும் மறக்காது
நின்றிடும்..
நிலைத்திடும்…
நினைவுகளாய் நெஞ்சத்தில்
நீங்கவே
நீங்காமல்!!
தனியாய்
தவிக்கும்
தருணம்
எதிலும்
விழி
விழுங்கிய
விழியை
இமையால்
இறுகத்
தழுவு…!
மூடிய
விழியிலும்
விழிகள்
விருந்தாகும்
சுவாசத்தின்
சப்தம்
பின்னயில் இசையாய்
மாறவே மாறாமல்!!
அருமை நண்பரே!
ReplyDeleteநன்றி @ வரலாற்று சுவடுகள்
ReplyDelete