காற்றில் கீதம்
காதலாய்
ரீங்காரமிட
மூடிய
விழிகளை
மனமில்லை
திறப்பதற்கு…
அருகில்
நீ இருந்தும்!
அணுக்களின்
ஏற்பா ?
அனுபவத்தின்
பாடமா ?
கண்டிப்பாய்
தெரியவில்லை…
சத்தியமாய்
புரியவில்லை…
ஒற்றைக்
கண்ணால்
ஒளிந்(த்)துப்
பார்க்கவா?
ஓடிய
எண்ணத்தை
ஒரே
நொடியில்
வதம்
செய்தேன்…
பார்ப்பதின்
வெளிப்பாட்டால்
துணிந்தேன்
அல்லன்…
துரத்திட
சுகத்தை!
பார்க்கும்
பாக்கியம்
பரவாயில்லை
இழந்தாலும்…
கேடில்லை
கெட்டாலும்…
மனதின்
உதவியை
நாளும்
நாடினேன்
உணர்தலின்
மூலமாய்
நோக்கவும்
செவிசாய்க்கவும்
அதோடு
சேர்ந்து
சுவாசமான
காதலை
சுகமாய்
சுகித்திட!!
//காற்றில் கீதம்
ReplyDeleteகாதலாய் ரீங்காரமிட
மூடிய விழிகளை
மனமில்லை திறப்பதற்கு…
அருகில் நீ இருந்தும்!//
நல்ல வரிகள்!
//சுவாசமான காதலை!//
ReplyDeleteஅருமை
நன்றி வரலாற்று சுவடுகள் / குட்டன்
ReplyDelete