இக்கரையில்
நின்று
அக்கரையில்
நிகழ்த்த
இச்சை
மனதில்…
இம்சை
தொடங்கும்
நிராசையாகும்
நொடியில்…
கோபத்திற்கு
வரவேற்ப்பு
ரத்தின
கம்பளம் விரித்து!
நிபந்தனை
உறவு
நிசப்த
உறவாய்…
கோபத்தின்
சப்தத்தோடு…
உருவம்
இல்லா
உக்கிர
தாண்டவம்
உகந்த
உறவை
உச்சந்தலையில்
மிதித்திடும்…
என்றென்றும்
உறவிற்கு
எமனாய்
இருப்பதால்
எட்டி
உதைத்திடுவோம்...
எதிர்பார்ப்பின்
ஏகாதிபத்யத்தை!
//உறவிற்கு
ReplyDeleteஎமனாய் இருப்பதால்
எட்டி உதைத்திடுவோம்...
எதிர்பார்ப்பின் ஏகாதிபத்யத்தை!//
இன்னைக்கு இந்த வரிகளை படிக்கும் போது மனதை என்னவோ செய்கிறது.
நல்ல கவிதை.
நன்றி.
@Kousalya - பின்னூட்டத்திற்கு நன்றி. மனது சரியாக வேண்டுகிறேன்
Deleteஅருமை நண்பரே..தொடரட்டும் தங்கள் கவி மழை!
ReplyDeleteஎல்லாவற்றிக்கும் காரணம் - இந்த எதிர்ப்பார்ப்பு(ம்) தான்...
ReplyDeleteஎதிர்பார்ப்பின்றி இருக்க இயலுமோ
ReplyDeleteஅருமை சகோ
அருமை.
ReplyDeleteநன்றி.