தவறின்
மடியில்
தவறாமல்
மனிதம்
ஒவ்வொருவரும்….
தடுக்கவும்
முடியாது…
தவிக்கவும்
வேண்டாம்…
நிச்சயமான
தவறை
நியாயப்
படுத்த
நித்தம்
சத்தம்…
மாறாய்
மதி
கெட்டு
மயக்கத்தின்
உச்சியில்
மறுக்கும்
முறுக்கு…
இல்லையேல்
இவன்
அவனென
இன்னா
செய்தல்…
செய்த
தவறை
தவறென்று
ஏற்பதில்
தவறென்ன??
மனதோடு
ஒன்றி
மன்னிப்பு
கேட்டால்
மானமா
போய்விடும்??
கடுகாய்
தவறோ
காடாய்
தவறோ
கற்றுக்
கொள்ளலாம்
கடலளவு…
இதுவரை
நடந்த
இடைவிடா
தவறை
இனிமேலும்
செய்யாமல்
இனமிது…
மனித இனமிது
இருமாப்புடன்
தவிர்த்தால்
இனிது
இனிது
இப்பொழுதும்
இனிது
எப்பொழுதும்
இனிது!!
நம்மைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் நம் தவறுகள் அவரை பாதித்திருப்பின் மன்னிப்பு கேட்டால் மனிதம் ஆகும்!
ReplyDeleteஇதுவரை நடந்த
ReplyDeleteஇடைவிடா தவறை
இனிமேலும் செய்யாமல்
இனமிது… மனித இனமிது//
மிகச் சரி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிது இனிது உங்கள் கவிதை மிக இனிது !! :)
ReplyDeleteஇறுமாப்பை தவிர்த்தால் எல்லாம் நலமேனு அழகா முடிச்சதுக்கு என் பாராட்டுகள் !
பின்னூட்டத்திற்கு நன்றி @ வரலாற்று சுவடுகள் / Ramani / Kousalya
ReplyDeleteமன்னிப்பை விட சிறந்த வெகுமதி ஏது...?
ReplyDeleteஉண்மை @ தனபாலன்
ReplyDelete