சந்தர்ப்பம்
இருந்திருந்தால்
சர்ப்பமும்
என்வசம்
வாய்ப்பு
என்றும்
நிகழ்வதில்லை
தற்செயலாய்…
நிகழ்த்த
வேண்டும் தன் செயலால்!!
உறவினில்
கூடிடும்
உற்சாகத்திற்குத்
தடை
‘உம்’
சொல்ல அச்சம்
மிரட்சி
மீதமிருந்தால்
தொடர்பெல்லாம்
தூரம்…
துக்கத்தை
துரத்த அச்சம் தவிர்!!
முற்றும்
தெரிந்திருந்தும்
முத்தாய்ப்பாய்
காத்திருந்து
முடிவெடுப்பதில்
தாமதம்
ஊசலாடும்
மனதினால்
ஒத்திவைக்கப்படும்
தீர்மானம்…
திடமான
தீர்வு தீர்த்திடும் சங்கடத்தை!!
வாழ்வின்
இறுதியில்
வருத்தத்தின்
காரணியை
எண்ணி
எண்ணி ஏங்காமல்
காரணத்துக்கு
கல்லறை
இக்கனமே
கட்டுவோம்!!
வாய்ப்பும் திட்டமிடுதலும் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை சொல்லும் வரிகள்...
ReplyDeleteமிகவும் பிடித்தவை :
/// வாய்ப்பு என்றும்
நிகழ்வதில்லை தற்செயலாய்…
நிகழ்த்த வேண்டும் தன் செயலால்!! ///
நன்றி...
அனைவரும் அவசியம் மனதில் எப்போதும்
ReplyDeleteஇருத்திக் கொள்ளவேண்ட்ய மணிவாசகம்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நன்றி தனபாலன் / Ramani...
ReplyDelete