அல் ஐன் பயணம்...(Jebel Hafeet)
வயிற்றை, போகும் வழியில் நிறைத்துக் கொள்ள முடிவு
செய்து, ‘sandwich’ வகையறாக்களை வாங்கிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே பயனத்தைத் தொடர்ந்தோம்.
அல் ஐன் செல்லும் வழியை கேட்டு அறிந்து, வண்டி சீறிப் பாய்ந்தது.மணி நான்கு.135 கி.மீ
கடக்க வேண்டும்.6 மணி வரை தான் zoo திறந்திருக்கும்.ஸ்ம்ரிதியை எப்படி சமாதானம் செய்வது?
அப்பொழுதே யோசிக்க தொடங்கினோம்… கதை பிறந்ததுJ
6 மணிக்குள் போகவில்லை எனில், ஊசிப் போடுவார்களே…
என்ன செய்ய என்று பேசத் தொடங்க… அம்மு ஏன் என்று கேட்க… கேள்வியை எதிர்ப்பார்த்திருந்தாலும்,பதில்
சொல்லும் பொருப்பை தேவா ஏற்றுக் கொண்டார். விலங்குகளிடமிருந்து ‘Infection’ நமக்கு
பரவாமல் தடுக்க இந்த ஊசி… என சொல்ல, அடுத்த கேள்வி பட்டென்று வந்தது.காலையில் ‘Infection’
வராதா?மாலையில் மட்டுமே வரும் என்று சொல்லி,ஊசிப் போட்டுக் கொள்வதென்றால் பரவாயில்லை.நாங்கள்
போட்டுக் கொள்வோம்.அம்முக்கு வலிக்குமே.. என்று மாறி மாறி தேவாவும் நானும் சொல்ல… அப்போ
என்ன செய்ய என்று அழும் குரலில் வலது கையின் சுண்டு விரலை நீட்டி ‘கட்டி’ என சொல்ல
பாவமாய் இருந்தது.உண்மையை புரிந்து கொள்ளும் நிலையில் குழந்தை இல்லாததனால்,இத்தனை கதைகள்
தேவைப் பட்டது.
சமாதான பேச்சுத் தொடர்ந்தது.. அப்போ இப்படி செய்யலாம்..போய்
பார்க்கலாம்.ஊசி போடறதா இருந்தா, நம்ம சனிக்கிழமை கண்டிப்பா வேற zooக்கு போகலாம்.இல்லன்னா
இன்னைக்கே போகலாம் என்று சொல்ல… உறுதியா என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டு ஒரு வழியாய்
அம்மு சமாதானமானாள்.
தெரியாத சாலை… இரு பக்கமும் நம் ஊரைப் போன்ற விளை
நிலங்கள் / பண்ணைகள் (Farms).பார்த்துக் கொண்டே வியந்தோம்.வியந்து கொண்டே பார்த்தோம்.பாலைவனத்தில்
தொடர்ச்சியாய் 30-40 கி.மீ தொலைவிற்குப் பண்ணைகளைப் பார்த்தது தான் வியப்பிற்கான காரணம்.கொஞ்ச
நாளில் அமீரகத்திற்குத் தேவையான காய் கனிகள் இங்கேயே விளைவிக்கப் பட்டாலும் ஆச்சரியப்
படுவதிற்கில்லை எனப் பேசிக் கொண்டே… 89.5 FMஐ மீண்டும் திட்டிக் கொண்டே பயணித்தோம்.
மாலை தேநீர் பருகுவதற்கான நேரம் நெருங்கியிருந்தது.Petrol
Stationஐ கண்கள் தேடின… 8 கண்களாவது தேடிக் கொண்டிருந்தது.நாங்கள் வலது புறமாய் சென்றுக்
கொண்டிருக்க இடது புறத்தில் ‘Petrol Station’ பார்த்தோம்.அங்கே அங்கே என்று குரல் வர…
தேநீரின் தேவை புரிந்தது.இன்னும் கொஞ்ச நேரம் கழித்து…. நீங்க நினைக்கிறது கரெக்ட்
தான்…. அனைவரின் கண்களும் விரிந்தது.கார் நின்றது.தேநீர் அருந்தினோம்…சில பிஸ்கட் பாக்கெட்களை
வாங்கிக் கொண்டு…சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு..பயணத்தை தொடர்ந்தோம்.
அம்மு தூங்கிவிட்டாள்.இன்னும் எத்தனை கி.மீ போகவேண்டும்
என்பதனை பார்த்துக் கொண்டே… வண்டி செல்லும் வேகத்தையும் நேரத்தையும் கணக்கிட்டுக் கொண்டே
சிறிது நேரப் பயணம் தொடர்ந்தது.தேவா,மிதேஷ் ஆகியோர் இந்த விளையாட்டில் தீவிரமாய் இருந்தனர். இப்பொழுது மண் குன்றுகள் தென்பட்டன. பார்க்க அழகாய் இருந்தது. நம்ம ஊர் போல போகும் வழியெங்கும் சிறு கிராமங்கள்.’Jebel
Hafeet’ என்ற மலைக்கு முன்னே சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம்.மேலே சாப்பிடுவதற்கு
ஒன்றும் கிடைக்காது..பரோட்டாவும் குருமாவும் வாங்கிக் கொண்டு மலையில் ஏறி அங்கே அமர்ந்து
சாப்பிடலாம் என்று தேவா சொல்ல ‘OK’…சொல்லி முழுமனதாய் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.போன
முறை வந்த போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்ததால் பாதியிலியே திரும்பி வந்ததை
சொல்லிக் கொண்டிருந்தார்…
அல் ஐன் வந்து விட்டதை வளைவுப் பாதைகள் (Round
About) உணர்த்த… உற்சாகம் ஒட்டிக் கொண்டது.அம்மு கண் விழித்தாள்..zoo என்று இழுக்க,zoo
மூடியிருந்தது..நீ தூங்கிட்டு இருந்த என்று சொல்ல…அவளும் அப்போ கண்டிப்பா சனிக்கிழமை
போகனும் என்று மீண்டும் உறுதி செய்து கொண்டு அஷயாவுடன் பேச்சு சுவாரஸ்யத்தில் இறங்கியிருந்தாள்.
பரோட்டா வாங்க இடத்தைத் தேட,கண்ணில் ஒன்றும் படவில்லை.சுற்றுலா
வந்தால் ப்ரௌன் நிற போர்டைப் பார்த்தால்,சரியான தகவல் கிடைக்கும் என்று தேவா சொல்ல..’Jebel
Hafeet’ செல்வதற்கான குறியீடுகளைப் பார்த்த படி பின் தொடர்ந்தோம்.செல்லும் போது தேவா
பேய் கதைகளை சொல்லிக் கொண்டே வர…கூட சேர்ந்து எங்கள் கற்பனைகளையும் அவுத்து விட.. சாலையில்
எங்கள் வண்டி மட்டுமே…அப்போது கையில் பேனாவும் நோட்புக்கும் இருந்தால்,2-3 படங்களுக்கு
கதையும் திரைக்கதையும் கிடைத்திருக்கும்! அம்மு வீட்டுக்குப் போகலாம் என்று சொல்ல ஆரம்பிக்க…பின்னர்
பேய்க் கதைகள் கைவிடப்பட்டன.
சிறிது நேரப் பயணத்திற்குப் பின்,Brown Board கண்களிலிருந்து
நழுவியிருந்தது…அதோடு சேர்ந்து வழியும்.சாலையில் யாரும் இல்லை.எப்படிப் போவது…என்ன
செய்வது…கேள்விகள் எழுந்தாலும் பயணம் தொடர்ந்தது.சாலை நேராக சென்று கொண்டிருந்த்து.வலது
பக்கமோ இடது பக்கமோ வளையாமல் சென்று கொண்டிருந்தது சாலை.சிறிது நேரம் யாரும் பேசவில்லை.10
நிமிட பயணத்திற்குப் பின் வலது பக்கம் ஒரு கட்டிடம் தெரிந்தது.அங்கிருந்த காவலாளியிடம்
வழி கேட்டு வண்டிக்கு வந்தால்,இப்போ அங்க பாருங்கண்ணா காவலாளியக் காணோம் என்று தேவா
சொல்ல…நிஜமாகவே எல்லோரும் திரும்பிப் பார்த்தோம்.அப்போது தான் புரிந்தது…பேய் மற்றும்
திகில் கதைகளின் தொடர்ச்சி என்று….
வழி தெரிந்து மலை மேல் ஏறினோம்.2-3 நிமிடம் மலையில்
ஏறும் வரை எங்களுக்கு முன்னோ, பின்னோ, எதிரேயோ எந்த ஒரு வண்டியும் இல்லை.ஒரு வேளை நாளை
ஈத் என்பதால் இன்று மலை மேல் ஏறுவதற்கு தடையோ? எங்குமே ஒன்றுமே போடவில்லையே… ஏறுவதற்கு
முன்னால சொல்ல வேண்டாம் என்ற 10 நிமிட புலம்பலுக்குப் பின் முதல் காரை எங்கள் எதிரே
பார்த்தோம்.அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி மலை ஏற்றத்தைத் தொடர்ந்தோம்.சுற்றியிருந்த
இயற்கையை ரசிப்பதில் மனம் லயிப்பு….எல்லாருடைய மனதும் இந்த இயற்கையை பார்க்கும் பொழுது
ஒரே மாதிரி செயல்படுவது எப்படி??
காரை Barkingல் நிறுத்திவிட்டு…புகைப்படங்கள் எடுத்தோம்.உயர்ந்த
நிலையிலிருந்து கீழே பார்த்து மகிழ்ந்தோம்.பேச ஆரம்பித்தோம்…குழந்தைகள் விளையாட சறுக்கு
மரம்,ஊஞ்சல்,சீ-சா என ஒரு பூங்கா போல் இருக்க..குழந்தைகள் விளையாடத் தொடங்கினர்.நாங்களும்
குழந்தைகளாக மாறி விளையாடிக் கொண்டிருந்தோம்.ஒரு எகிப்திய குழந்தை அஷயா அருகில் வந்து
உரையாடத் தொடங்க…அஷயா அம்முவுடன் விளையாடிக் கொண்டிருக்க..அந்த குழந்தை அஷயா தன்னுடன்
விளையாட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தது.பெரியவர்கள் நாங்கள் அருகில் இருப்பதை
அந்த எகிப்திய குழந்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
அந்த சமயத்தில், கையில் சாப்பாடு இல்லை என்பது நினைவிற்கு
வர…எப்படி சாப்பிடலாம்?கீழே போய சாப்பிட்டு விட்டு வரலாமா? மலை மேல் கொண்டு வந்து கொடுப்பார்களா
என்று பலவாறு பேசிக் கொண்டிருக்கும் போது.. மற்றொரு இந்திய குடும்பம் வர..அவர்களிடம்
கேட்டோம்…மலைக்கு இன்னும் மேலே போனால் கிடைக்கும் என்று சொல்ல..மேல Restaurant இருப்பதை
உறுதி செய்து கொண்டு மலை மேல் பயணிக்கத் தொடங்கினோம்…
மலை மேல சாப்பிட்டோமா? இல்ல சீக்கிரமா கிளம்பிட்டோமா…
அடுத்த பாகத்தில்….
No comments:
Post a Comment