விழியில்…
என் விழியில்
நீ
விழும் வரை
இமை
திறக்காதிருந்தேன்….
உன்
மதுரத்தமிழ்
செவியில்
ஒலிக்கும்வரை
காது
கேளாதிருந்தேன்…
பிறநாற்றம்
நாடாமல்
நின்
சுவாசம் தேடி
மூச்சை
அடக்கியிருந்தேன்…
உன்
பெயரினைமட்டும்
உச்சரிக்கும்
இச்சையுடன்
பிறருக்கு
ஊமையாயிருந்தேன்…
உனையின்றி
யாரையும்
தொட்டிடத்
தயங்கினேன்…
காற்றைத்
தீண்டாமல் ?
ஐம்புலனின்
சங்கல்பம் ?
நிலை
குலைந்தேன்
ஐயத்தில்
மயக்கம்
தெளிந்தது
மறு
நொடியில்…
நினைவினில்
நெஞ்சத்தில்
நிறைந்த
நீதானே
என்னைச்
சுற்றி
காற்றினிலும்!!
அனைத்திலும்...
ReplyDelete/// உனையின்றி யாரையும்
தொட்டிடத் தயங்கினேன்…
காற்றைத் தீண்டாமல் ? ///
ரசித்தேன்...
நன்றி தனபாலன்...
ReplyDelete