பயணத்தின் தொடக்கம்

இப்படி செய்தால் என்ன? என்ற தாய் குலங்களின் கேள்விக்கு
OK என்று தோளை காது வரை தூக்கி, தலையை சாய்த்து, உதட்டைப் பிதுக்கி வடிவேலு பானியில்
சொல்ல அந்த OK, பயனம் முழுவதிலுமே தொடர்ந்தது.
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு, 10.45 மணிக்கு
கீழே இறங்கினோம்… தேவாவின் வண்டியில் விமான நிலையம் நோக்கி பயணித்தோம்.
எங்கப்பா போறோம் ? என்று மிதேஷ் தொடங்க, முதல்ல
விமான நிலயம் என்றவுடன் ‘ஏய்….’ என்று நக்கலாக சொல்லிவிட்டு, ஒழுங்கா சொல்லுப்பா என்றான்.
மீண்டும் விமான நிலையம் என்ற வார்த்தை கேட்டு, போப்பா என்று முகத்தை தூக்கி வைத்துக்
கொண்டான். அவனிடம் பின் முழு திட்டத்தையும் விவரிக்க வேண்டியதாயிற்று.
10 நிமிட பயணத்திற்குப் பின், ஏம்ப்பா, அந்த பேக்
எடுத்தீட்டீங்களா என்று தேவி கேட்க, என் பையன் இல்லை என்பதை ஆம் என்று சொல்வது போல்
தலை அசைக்க, தேவா, திருப்பு வண்டிய என்றதும், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்தோம்.
நம்ம ஊரா இருந்தால், அப்படியே திருப்பி இருக்கலாம்…. இல்லையே…. என்று சிவாஜியின் பானியில்
சொல்லி நாங்களே சிரித்துக் கொண்டோம். ஒருவழியாய், அந்த பேக் எடுத்துட்டு ஆரம்பித்த
இடத்திலிருந்து தொடங்கினோம்.

அலைபேசியில் கான் அவர்களை அழைத்து, எப்படி வரவேண்டும்
எனக் கேட்டால், வண்டியை நிறுத்திவிட்டு வாருங்கள் என்கிறார். என்ன கொடுமை சரவணன் இது
என்று பேசிக் கொண்டே, கார் கம்பெனியை தேடிக் கண்டுபிடித்து, சம்பிரதாயங்களை முடித்துக்
கொண்டு (பணம் கொடுத்து, கையொப்பமிட்டு, தேவையான தஸ்தாவேஜுகளையும் கொடுத்துவிட்டு, விதிமுறைகளை
கேட்டறிந்து) கார் இருக்கும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்த சாரதியுடன் நான் கிளம்ப,
எங்கு வரவேண்டும் என்று தேவா அறிவுறுத்திவிட்டு, நாங்கள் வந்த வண்டியை எடுக்க தேவா
கிளம்பினார். வேறிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, வாடகை காரில் எங்கள் பயணம் அபுதாபியை
நோக்கி….
இதெல்லாம், ஒழுங்கா Plan செய்யக் கூடாதா என்று என்
மனைவி தேவியும் தேவாவின் மனைவி ஸ்ரீதேவியும் வினவ, (40 நிமிடம் அடுத்து என்ன நடக்கப்
போகிறது எனத் தெரியாமல் வண்டியில் அமர்ந்திருந்ததன் விளைவு) முன் தின நடப்புகளை சுருக்கமாய்
விவரித்துக் கொண்டே மெதுவாய் கிளம்பினோம். (முதல் பாகம்…. ஆங்… அதேதான்…) போகும் வழியில்
முதல் Petrol Stationல் வண்டியை நிறுத்தி தேநீர் அருந்த முடிவு செய்தோம். முடிவு நம்
கையில் இல்லையே…. ஒவ்வொரு petrol stationஐயும் தாண்டிய பிறகு தான் பார்த்தோம்… போகும்
வழியில் வீடுகள் இருந்ததைப் பார்த்து, இங்கு யாராவது இருக்கிறார்களா என்று கேள்வி பிறந்து,
பின்னர் இருப்பவர்கள் எப்படி தங்கள் தேவையை சமாளிப்பார்கள்? என்று அவர்களுக்காய் கவலைப்பட்டு….
இடையில் ஸ்ம்ரிதி முதலில் zoo போக வேண்டும் எனத்
தொடங்க, சமாதானப்படுத்த நாங்கள் பட்டபாடு…. உஸ்… . Zoo வழியில் இல்லை… முதலில் அபுதாபி
போய்விட்டு பின்னர் zoo போகலாம் என்று அனைவரும் பலவாறாய் பேசி…. எப்பா….! (பெருமூச்சு
தான்…)



மசூதியின் வாயில் தெரிந்தது. ஒரு சின்ன இல்லை பெரிய
அளவில் தயக்கம்… விடுமுறை நாள் – ஒருவரும் கண்ணில் படவில்லை. 2 நுழைவாயில்களைப் பார்த்தோம்…
2ம் திறந்திருக்க வில்லை. இன்னும் எத்தனை நுழைவாயில்கள் இருக்கு? திறந்திருக்கா இல்லையா?
ஒரு வேளை இன்று அடைப்போ? அடைபட்டிருந்தால், என்ன செய்வது ? இவ்வளவு தூரம் வந்த பயணம்
Wasteஆ?? வெளியிலிருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டியது தான்…
உதடுகள் சொன்னாலும், மனதில், மசூதியின் உள்ளே போக முடியாததை எண்ணி வலி…
நுழைவாயில் மூடி தான் இருக்கு… இங்கேயே நிற்பதில்
எந்த வித பயனும் இல்லை… மசூதியை ஒரு முறை சுற்றி வருவோம்… ஏதாவது வழி இருக்கும்… மனதில்
நம்பிக்கை லேசாக துளிர்விட்டுக் கொண்டுதான் இருந்தது…கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க
வேண்டிய இந்திய அணியை பார்க்கும் போது இருப்பது போல்….
இந்தியா வென்றதா ? மசூதியின் உள்ளே செல்ல முடிந்ததா?
யாரும் பேசிக் கொள்ளவில்லை… அடுத்த பாகத்தில் தொடர்வோம்……….
இனிய அனுபவம்... தொடர்ந்து வருகிறேன்...
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDelete