Monday, December 31, 2012

புத்தாண்டு 2013...!!



2012...

பல பாடங்களை
நமக்கு நடத்திவிட்டு
நகர்ந்து கொண்டது....

நல்லவையும் தீயவையும்
கலவையாய் சேர்ந்து
கடந்து தான் விட்டது....

நீரில் எழுதிய
கோலமாய்
நிர்மூலமாகி விட்டது...

கடந்து சென்ற காலத்திடம்
கற்று கொண்டு
கற்றதை பயிற்றுவித்து

நம்பிக்கையுடன் நகர்ந்திடுவோம்
2013ஐ நோக்கி....

ஒரே ஒரு உறுதி மொழி....

மனிதத்தை மரணிக்க
ஒரு போதும் அனுமதியோம்...

சூளுரைத்து விட்டு
எதிர் கொள்வோம்
புது வருடத்தை!!