Sunday, June 10, 2012

தெளிவு


தணப்பின் தமியிலும்
தாவா தாள்
திரட்சியாயிருப்பின் திறம்!
தீர தீர்க்கம்!!
துவர துகளறு
தூணின் தூவாய்
தெவ்வரை தெறல்
தேருங்கால் தே!
தைஇ தைரியம்!!
தொடர் தொடலை
தோட்டி தோற்றுவிக்கும்
தௌத்தியமாய்!!

விளக்கம்:
பிரிவின் தனிமையிலும் உண்மையான முயற்சி முற்றிலும் இருந்தால் மனிதன் முழுமையானவாகிறான். தீர்க்கமானவாகிறான். முற்றிலும் குற்றமற்று தூணின் வலிமையுடன், பகைவரை அழிப்பதை (தேவையில்லாததை அழித்தால்) ஆய்ந்து தெளிந்தால் இனிமை! அது தைரியத்தை உடுத்துவதற்கு சமம். தொடர்ந்து மாலைகளை துதியாய் நுழையும் இடத்திலெல்லாம் கொடுக்கும்.
பின் குறிப்பு:
தமிழில் புது சொற்களை கற்க எண்ணம் கொண்டு 'தெளிவு' பெற விரும்பினேன். 'த'கர வரிசையில் த முதல் தௌ வரை இருக்கும் சொற்களை கொண்டு கவிதை செய்ய தொடங்கிய முயற்சியின் விளைவு - இந்த தெளிவு.

1 comment:

  1. அன்பின் ஷங்கர்

    தமிழில் புதிய சொற்களைக் கற்று - கவிதையும் எழுதியமை நன்று. புதிய சொற்கள் கற்று - பிறகு மறுமொழி இடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    ReplyDelete