Monday, August 27, 2012

இது தான் காதல் ??


காதலை சொல்லலாமென்று
காதருகே சென்றேன்
காற்று மட்டுமே....

தாராளமாய் பேசினாள்
தயங்காமல் பேதை
தவிப்புடன் நான்...

அவளிடத்தே காதல்
அறவே இல்லையோ ?
அறிவிலியாய் மனம்...

அறுபதாவது நாளாய்
அருவியாக நினைத்து
அலையாய் நான்....

கரை தொட
கலக்கம் ஏன் ?
கறையில்லையே என்னிடம்...

நேர்கொண்ட பார்வையுடன்
நேரே பார்த்தேன்
நேசக் கண்களுடன் - அவள்...

கண்களைப் பார்த்து
கண்ணீர் மல்க
கன்னியவள் கூறினாள்

நின் காதலை
நான் அறிந்தேன்
நீ இன்னுமா ?

அவளின் காதலையும்
அறிந்ததை அறியாமலும்
அருகாமையிலிருந்தே.....

இது தான் காதல் ??

4 comments:

  1. இதுதான் காதல்னு பல இலக்கியங்கள்(?) சொல்லுது

    ReplyDelete
  2. சங்க இலக்கியங்களின் தாக்கம் நம்மிடையே இருக்கத்தானே செய்யும் தோழா...

    ReplyDelete
  3. ஓ.... இது தான் காதலா....!!!

    (காதல் வந்தப்பிறகு யார் சொன்னால் என்ன? எனக்கும் புரியமாட்டுதுங்க.)

    ReplyDelete
  4. காதலித்துப் பாருங்கள்...உங்களுக்கும் புரியும்.

    ReplyDelete