Monday, November 12, 2012

நீயா நானா - 11/11/2012

நேற்று 'நீயா நானா' நிகழ்ச்சிப் பார்த்தேன்... மனதில் ஒரு வகையான அதிருப்தி நிலவியது.
 
சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது இம்மாதிரியான எண்ணம் தோன்றுவது தவிர்க்க முடியாததாய் ஆகிவிடுகிறது. சில நேரம் நடத்தப் படும் விதத்தினால் ; சில நேரம் நடத்துபவர்களால்... சில நேரம் நிகழ்வில் கலந்து கொள்பவர்களால்.... சில நேரம் 'ஏனோ தெரியவில்லை...எனக்குப் பிடிக்க வில்லை' என்ற பதில் மட்டுமே மிஞ்சுகிறது.
 
நேற்றைய நிகழ்ச்சியினை பார்த்த பிறகு உண்டான திருப்தியின்மைக்கு சொல்லப் பட்ட 'சில நேரம்' எதுவுமே காரணமின்றி இருந்தது. எனக்கு தோன்றியது, எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு. இந்த மாதிரியான தலைப்பை எடுத்துக் கொண்டதற்கான காரணத்தை வெவ்வேறு விதமாய் திரு.கோபிநாத் அவர்கள் கூறி வந்தாலும், ஏனோ அவை யாவையுமே ஏற்றுக் கொள்ள என்னால் இயலவில்லை.
 

உடுக்கும் உடை சம்பந்தமான தலைப்பு... அதுவும் வட இந்தியர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் இடையேயான வேறுபாடுகள்.... யாருக்கு உடையலங்காரம் செய்து கொள்வதில் அதிகமான புலனுணர்வு இருக்கிறது ? விரசமாய் உடை உடுத்துபவர்கள் யார் ? தென்னிந்தியர்கள் உடுத்தும் உடையில் வட இந்தியர்களுக்கு பிடித்தது எது...பிடிக்காதது எது ? இதே மாதிரி வட இந்தியர்கள் உடுத்துவதில் தென்னிந்தியர்களுக்கு பிடித்தது எது... பிடிக்காதது எது?
 
எனக்குள் எழுந்த கேள்வி... இந்த மாதிரியான தலைப்புகள் தேவைதானா ? இரு பிரதேசங்களுக்கும் இடையேயான கலாச்சாரங்களைப் புரிந்து கொள்வது தான் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் என்று திரு,கோபிநாத் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினாலும்.... தலைப்பை எடுத்துக் கொண்டுவிட்டோம்... அதனை நியாயப்படுத்தும் முகாந்திரமே அந்த சொற்களில் அதிகம் தெரிந்தது...
 
ஏற்கனவே வட இந்தியனுக்கும் தென்னிந்தியனுக்கும் ஏகப் பொருத்தமாய் இருக்கிறது. ஒரே அலுவலகத்தில் இரு சாராரும் இருக்கும் பட்சத்தில் இந்த பொருத்தம் எளிதில் விளங்கும். இந்த நிலையில் இப்படிப்பட்ட தலைப்பினால் புரிதலை விட பிரிவினையை உண்டாக்கும் சூழலே அதிகமாய் எனக்குப் பட்டது.
 
நீயா நானா நிகழ்ச்சியில், மக்களுக்கு புரிதலை உண்டாக்கும் கருத்துகள் அதிகமாய் சொல்லப்படும். கோபிநாத் அவர்களின் ஒவ்வொரு வரியிலும் இப்படி நடந்து கொண்டிருக்கிறதே....என்ற ஆதங்கம் இருக்கும். எப்படி இதனை சரி செய்வது....என்ன செய்தால் நல்ல முடிவு பிறக்கும் என்ற கோனம் இருக்கும்,,,,
 
ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ?? கேள்விக் குறியே மனதில் மிச்சமாய் இருந்தது.
 
நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மேல், மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. நிகழ்ச்சியில் எடுத்துக் கொள்ளப்படும் தலைப்புகள், அந்த எதிர்பார்ப்பை கொன்று புதைத்து விடுமோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த பதிவு....

 

4 comments:

  1. கொஞ்சம் ஓவராக போகிற போல்தான் தோன்றுகிறது...

    எல்லா தரப்பு கருத்துக்களையும் ஏற்று நடுநிலையோடு இருந்தால் இந்நிகழ்ச்சி இன்னும் பேசப்படும்...

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. விடுங்க பாஸ்.. அவரும் என்ன தான் பண்ணுவார்..
    நானும் கொஞ்ச நேரம் தான் பார்த்தேன் ஏனோ ஈர்க்கவும் இல்லை, அவர்கள் பேசியது அவ்வளவு முக்கியமாக படவும் இல்லை..

    ReplyDelete
  4. thangaludaiya karuththukkukku naanum udanpadugiren nandri
    surendran

    ReplyDelete