Monday, May 28, 2012

தன்முனைப்பு...


தன்முனைப்பு
தள்ளிப் போடுமோ
தயவின்றி தங்கும்
தருணத்தை….?
திமிர்
தின்று தீர்க்காதோ
தீர்வாய் தோன்றும்
தெளிவை?
ஆணவம்
அகற்றாதோ
அனுபவம் அருளும்
அன்றாடத்தை?
சுயநலம்
சுழற்றாதோ
சுகம் சுமக்கும்
சுவாசத்தை ?
இறுமாப்பின் இறுக்கத்தோடு
இனியும் இயங்கினால்
இன்னா செய்தவர்
இவரே இவரே!!

5 comments:

  1. திமிர்,ஆணவம்,சுயநலம்,இறுமாப்பு இவையெல்லாம் இல்லாத தன்னம்பிக்கை இருக்கணும்ன்னு சொல்றீங்க..சரியா அண்ணா என்னோட புரிதல்..?!

    ReplyDelete
  2. @சேலம் தேவா - புரிதல் மிக சரி...பின்னூட்டத்தை பார்த்த பிறகு, தன்னம்பிக்கை விடுபட்டு விட்டதோ என்ற எண்ணம். மனிதனுக்கு தன்முனைப்பு (EGO) வேண்டாம் என்பதே நோக்கம்....

    ReplyDelete
  3. இறுமாப்பு என்ற ஒற்றை வார்த்தையே தன்முனைப்பின் பொருளை வெளிப்படுத்தி விடுகிறது, தான் முனைப்பாக இருக்கலாம்.தன்னையே முனைப்பாக முன் நிறுத்துவது கூடவே கூடாது.

    கவிதை வடிவில் தந்தமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. தன் முனைப்பு எப்போதும் எதிராளியை சரியாக எடைபோடுவதில்லை அது எப்போதும் தனது நியாய தர்மங்களையே பார்த்துக் கொள்கிறது. வார்த்தை கோர்வைகள் அருமை அண்ணா!!!!

    ReplyDelete
  5. @Siva / @dheva - பின்னூட்டத்திற்கும் புரிதலுக்கும் நன்றி

    ReplyDelete