Monday, September 24, 2012

முயற்சியின் கை!!


மகிழ்ச்சியின் மடியில்
சிரம் வைத்து
கலைவே இல்லா
விழி மூடல்….
மனிதத்தின் தேடல்!

 
மூடிய இமையினை
சட்டை செய்யாது
இரக்கம் இல்லா
ரேகையாய் கவலை…
மனதினில் தொல்லை!
 
சம்பவமும் எண்ணமும்
பிரசவிக்கத் தவறியதால்
பகுத்தறிவை பாராமல்
முற்றடுப்பு முன்மாதிரி..
சங்கடமாய் வாழ்வாதாரம்….
 
இடையூறை இடித்திட
பகடை உருட்டி
பலனும் கண்டேனென
முடியுமா பறைசாற்ற ?
முத்திரையாய் எதிர்பார்ப்பு..
 
வாழ்வின் பாதையில்
தடைகளைத் தகர்க்க
முயற்சியின் கையை
முன்னே நிறுத்து
நம்பிக்கையாய்!!

10 comments:

  1. வாழ்வின் பாதையில்
    தடைகளைத் தகர்க்க
    முயற்சியின் கையை
    முன்னே நிறுத்து
    நம்பிக்கையாய்!!


    அருமை...

    ReplyDelete
  2. அருமையான சிந்தனை நண்பரே.

    ReplyDelete
  3. படைப்பின் இலக்கணம் தெரியாது. ஆனாலும் தலையில் கனமும் இல்லை.... தெரிந்ததை எழுதுகிறேன். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் ; திருத்திக் கொள்கிறேன்....

    தங்கள் அறிமுகம் தாங்கள் யார் என்பதைக் காட்டுகிறது.

    அருமை.

    ReplyDelete
  4. தமிழ்க்காதல் என்ற முவ அவர்களின் புகழ்பெற்ற நூல் எனக்கு மிகவும் பிடித்த நூல் நண்பரே..

    அந்த நூலைப்பற்றி அறிய..

    http://www.gunathamizh.com/2009/04/blog-post_97.html

    இந்த இணைப்புக்குத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
  5. அருமையான சிந்தனை வரிகள்... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  6. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

    ReplyDelete
  7. நன்றி @ பாலாஜி / தனபாலன் / Gnanam Sekar / முனைவர் இரா குணசீலன்...


    @ முனைவர் இரா குணசீலன் - முவ அவர்களின் தமிழ்க்காதல் நூலைப் பற்றி அறிய கொடுத்த இணைப்பிற்கு மிகவும் நன்றி...

    ReplyDelete
  8. வணக்கம்

    சிறந்த கவிதை
    நிறைந்த மகிழ்வு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வணக்கம்

    தமிழ்க்காதல் பூத்துத் தழைத்தாடும் நெஞ்சுள்
    அமிழ்தம் சுரக்குமே ஆழ்ந்து

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  10. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி....@ கவிஞர் பாரதிதாசன்

    ReplyDelete